நல்லூர் இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் பூதவுடலுக்கு மக்கள் அஞ்சலி
10.10.2021 08:04:39
நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாகி இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் பூதவுடல் நல்லூரிலுள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இறுதிக் கிரியைகள் இன்று பகல் இடம்பெற உள்ள நிலையில் அவரது உடலுக்கு பெருமளவானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
குறிப்பாக அவருடைய உடலுக்கு பொதுமக்களும் அரசியல்வாதிகளும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.