பென்சில்களால் சிறுவர்களுக்கு ஆபத்து?

26.01.2025 13:06:21

சந்தையில் விற்கப்படும் பெரும்பாலான பென்சில்களில் சிறுவர்களின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பல இரசாயனங்கள் காணப்படுவதாக  மருத்துவர்கள்  எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பாக பாடசாலைச் சிறுவர்கள் பயன்படுத்தும் பென்சில்கள் பல்வேறு வண்ணங்களில் கவர்ச்சிகரமான தோற்றத்தில் விற்கப்படுவதால் குழந்தைகள் அவற்றை வாங்குவதற்கு  மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர் எனவும், அவ்வாறான பென்சில்களில் அதிக அளவு இரசாயனங்கள் மற்றும் பாதரசம், ஆர்சனிக் மற்றும் காட்மியம் போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும்  உலோகங்கள் பூசப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சிறுவர்கள்  பென்சில்களை  பயன்படுத்தும் போது தங்களை அறியாமலேயே பென்சிலை வாயில் வைத்து மென்று உட்கொள்வதால், அவர்கள் நோய் வாய்ப்படலாம் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.