பீரிஸ் உட்பட பலரை தூக்கி எறிகிறது

03.02.2023 00:12:02

 தலைவர் ஜி. எல். பீரிஸ் உட்பட கட்சியை விட்டு விலகிய அனைவரும் கட்சியில் இருந்து நீக்கப்படவுள்ளதாகவும், அதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் இன்று (2) தெரிவித்தார்.

தலைவர் ஜி. எல். பீரிஸ் கட்சியில் இருந்து விலகிய பின்னரும் கட்சிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவித்த சாகர காரியவசம், அவ்வாறான பற்றாக்குறை இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

காரியவசம் வெளியிட்ட அறிவிப்பு

பெரமுனவில் இருந்து வெளியேறிய சிலரால் உருவாக்கப்பட்ட 'ஹெலிகொப்டர்' அடையாளத்துடன் கூடிய குழு நெலும் மாவத்தை அல்லது மந்தமுலனைக்குள் புகுந்துவிடும் என்று தான் நம்புவதாக காரியவசம் மேலும் குறிப்பிட்டார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் அமைப்பு தொடர்பில் இன்று (2) நெலும் மாவத்தையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே சாகர காரியவசம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.