விக்டர் ஐவன் காலமானார்!
19.01.2025 14:23:41
இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் இன்று காலமானார். அவருக்கு வயது 75 ஆகும். 1986ஆம் ஆண்டு ராவய மாத இதழை ஆரம்பித்து பின்னர் வார இதழாக அதனை வெளிக் கொண்டு வந்து, அதன் ஆசிரியராக 25 ஆண்டுகள் பணியாற்றினார் விக்டர் ஐவன். ஜேவிபி கிளர்ச்சிக்கு முந்திய குண்டு வெடிப்பில் கை ஒன்றை மணிக்கட்டுடன் இழந்த அவர் ஜனநாயகம், ஊடக உரிமை, மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்தவர்.