மட்டக்களப்பில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது
06.10.2021 06:31:32
மட்டக்களப்பு மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதாகவும் 92வீதமானவர்கள் முதலாவது தடுப்பூசியைப்பெற்றுக்கொண்டுள்ளதுடன் 85வீதமானவர்கள் இரண்டாவது தடுப்பூசியைப்பெற்றுக்கொண்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நா.மயூரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் 29கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதுடன் எந்தவித மரணங்களும் இடம்பெறவில்லையெனவும் இதுவரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 336மரணங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் முடக்கத்திற்கு பின்னர் புதிய தொற்றாளர்கள் வெகுவாக குறைந்துவருவதாகவும் தெரிவித்தார்.