முட்டை விலை வீழ்ச்சி!

21.01.2026 14:07:48

சந்தையில் முட்டை விலை வேகமாக வீழ்ச்சியடைந்து வருகின்றது. முட்டையொன்று சுமார் ரூ.30க்கு விற்கப்படுவதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. முட்டை உற்பத்தி அதிகரித்துள்ளதே இந்த விலை வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என குறித்த சங்கத்தின் செயலாளர் அனுரசிரி மாரசிங்க தெரிவித்துள்ளார்.