மீண்டும் வெடித்த அமெரிக்கா – சீனா வர்த்தக பதற்றம்!

14.10.2025 14:03:13

அமெரிக்காவும் சீனாவும் செவ்வாய்க்கிழமை (14) முதல் கப்பல் நிறுவனங்கள் மீது பரஸ்பர துறைமுக கட்டணங்களை விதிப்பதன் மூலம் ஒரு புதிய சுற்று பழிவாங்கும் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கின.

உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடையிலான வர்த்தகப் போரில் கடல் பகுதியை ஒரு முக்கிய முன்னணியாக மாற்றும் நடவடிக்கையாக இது அமைந்துள்ளது.

இதன்படி, அமெரிக்காவிற்குச் சொந்தமான அல்லது கொடியிடப்பட்ட கப்பல்களில் புதிய கட்டணங்களை வசூலிக்கத் தொடங்கியுள்ளதாக பெய்ஜிங் உறுதிப்படுத்தியது.

ஆனால், சீனாவால் நிர்மாணிக்கப்பட்ட கப்பல்களுக்குப் இது பொருந்தாது என்றும் பெய்ஜிங் கூறுகிறது.

அமெரிக்க கப்பல் நிறுவனங்களை ஆதரிப்பதற்காக உருவாக்கப்பட்டதாக வொஷிங்டன் கூறும் சீனக் கப்பல்கள் மீதான அமெரிக்க கட்டணங்களுக்கு பதிலடியாக இந்த நடவடிக்கை வந்துள்ளது.