கதறி அழுத யாஷிகா..

19.05.2022 10:48:30

2016-ம் ஆண்டு வெளியான ‘கவலை வேண்டாம்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர், யாஷிகா ஆனந்த். சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் கவர்ச்சியாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்.

அடுத்தடுத்த படங்களிலும் கவர்ச்சியாக நடித்து பேசப்பட்டார். படவாய்ப்புகளும் குவிந்து வந்தன. சமீபத்தில் எதிர்பாராத கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த அவர் பல மாதங்கள் ஆஸ்பத்திரியிலேயே சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் பழைய நிலைக்கு மீண்டு, ஒரு சில படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

 

சமூக வலைதளங்களிலும் யாஷிகா ஆனந்த் சுறுசுறுப்பாக இருப்பவர். ரசிகர்களுடன் தொடர்ந்து உரையாடி பல ஏடாகூடமான கேள்விக்கு பதிலளித்தும் உள்ளார். அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வரும் யாஷிகா தற்போது கதறி அழும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவரின் நண்பர்களும் அழுவதால் ரசிகர்கள் யாஷிகாவிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.