வங்கதேச விசாரணை ஆணையத்தின் அதிர்ச்சி அறிக்கை
வங்கதேசத்தில் ஹசீனா ஆட்சி நடந்தபோது 3,500 பேர் மாயமாகி இருப்பதாக வங்கதேச விசாரணை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டு இருக்கலாம் அல்லது கடத்தப்பட்டிருக்கலாம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹசீனா அரசை விமர்சனம் செய்பவர்களை குறிவைத்து நடவடிக்கை எடுத்ததாகவும், அவரது அரசின் ராணுவ உயர் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த அறிக்கையில், வங்கதேச பிரதமராக இருந்தபோது வலுக்கட்டாயமாக கைது மற்றும் கடத்தப்படுவது, உறவினர்களிடமிருந்து சம்பந்தப்பட்ட நபரை பிரித்து தனிமையில் அடைத்து வைப்பது போன்ற சம்பவங்கள் நடந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுபோன்ற சம்பவங்களால் 3,500-க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ராணுவ உயர் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் உடந்தையாக இருந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், மாயமானவர்களை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு கட்டமைப்பை ஹசீனா அரசு வடிவமைத்து இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுவரை மாயமானவர்கள் குறித்து எந்த தகவலும் இல்லை என்றும், அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.