தேவை ஏற்படின் மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் – பிரசன்ன குணசேன
10.08.2021 08:06:10
தேவை ஏற்படின் மூன்றாவது டோஸ் தடுப்பூசியை வழங்குவதற்கு இலங்கை தயாராக இருப்பதாக அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.
உலகின் எந்த வைரஸ் மாறுபாட்டிற்கும் எதிரான சிறந்த வழி தடுப்பூசிகள் என குறிப்பிட்ட அவர், இலங்கையில் செலுத்தப்படும் அனைத்து தடுப்பூசிகளும் 95-96% பாதுகாப்பானவை என்றும் குறிப்பிட்டார்.