6 நாட்களில் பரிமளா & கோ திரைப்படம் செய்துள்ள வசூல்!
13.06.2026 10:56:21
|
பசங்க, வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை என பல வெற்றி படங்களை தந்தவர் இயக்குநர் பாண்டிராஜ். இவர் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் பரிமளா & கோ. டார்க் காமெடி திரில்லர் வகையில் எடுக்கப்பட்ட இப்படத்தில் ஜெயராம் மற்றும் ஊர்வசி நடித்திருந்தனர். அவர்களுடன் இணைந்து சஞ்சனா, அனந்திகா, சாண்டி, மிஸ்கின் ஆகியோர் நடித்திருந்தனர். |
|
பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளிலிருந்தே எதிர்பார்த்த அளவிற்கு வசூல் வரவில்லை. இந்த நிலையில், 6 நாட்களில் பரிமளா & கோ திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 6 நாட்களில் உலகளவில் ரூ. 10 கோடி வசூலித்துள்ளது. |