அமேசான் பிரைமில் வெளியாக உள்ள மதராஸி திரைப்படம்!

01.10.2025 07:00:00

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘மதராஸி’ திரைப்படம் எதிர்வரும் முதலாம் திகதி அமேசான் பிரைமில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த திரைப்படத்தில் ருக்மினி வசந்த், வித்யுத் ஜம்வால், விக்ராந்த், பிஜூ மேனன், சார்பட்டா பரம்பரை புகழ் சபீர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மேலும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்து இருக்கிறார்.

முன்னதாக வருகிற 3ஆம் திகதி ‘மதராஸி’ அமேசானில் வெளியாகும் என தகவல் வெளியான நிலையில், தற்போது 2 நாட்களுக்கு முன்னதாகவே வெளியாக உள்ளது.

வட இந்தியாவில் துப்பாக்கிகளை தயாரித்து சென்னைக்கு கள்ளத்தனமாக கடத்த வில்லன் முயற்சிக்கிறார்.

தகவலறியும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் இதனை தடுக்கும் முயற்சி எடுக்கிறார்கள். சூழ்ச்சியால் தோல்வியை தழுவுகிறார்கள். ஒரு நேர்மையான நாயகனை கொண்டு இதனை தடுக்க நினைக்கிறார். இதனை தெரிந்து கொள்ளும் வில்லன் அந்த நாயகனின் காதலியை கடத்த அதன்பின்னர் நாயகன் மற்றும் வில்லனுடைய வாழ்க்கையில் ஏற்படும் நிகழ்வுகள் கொண்டு இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மதராஸி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்துள்ளது.