தந்திரம் செய்வர். அதிகாரபலம், பணபலத்தை பயன்படுத்துவர். இதனை தடுக்க வெற்றியை நோக்கி உழைப்போம்.
தி.மு.க.வின் வெற்றியை தடுக்க சூழ்ச்சி செய்வர் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “7 ஆயிரம் பேர் போட்டியிட மனு கொடுத்துள்ளனர். ஆனால் 173 பேருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்க முடியும். அனைவரையும் வேட்பாளராக ஆசைதான். ஆனால் ஆசை கடல்அளவு. தொகுதிகள் கையளவு. இதனால் யாரும் பிடிவாதம் பிடிக்கக்கூடாது. இவர் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை மீறுபவர்களாகி விடுவர். உன் சுற்று வரும்வரை காத்திரு என்று அண்ணா சொன்னதை நினைவு கூர்கிறேன்.
தேர்தலில் தி.மு.க. வெற்றியை தடுக்க சூழ்ச்சி, தந்திரம் செய்வர். அதிகாரபலம், பணபலத்தை பயன்படுத்துவர். இதனை தடுக்க வெற்றியை நோக்கி உழைப்போம்.
வெற்றியை ஈட்ட அனைவரும் ஒருமித்த கருத்துடன் பணியாற்றுவோம். மாச்சாரியங்களுக்கு இடம் கொடுக்காமல் ஆச்சரிய வெற்றியை பெறுவோம்” என ஸ்டாலின் கூறியுள்ளார்.