இந்தியத் தூதரகத்தின் அவசர வழிகாட்டுதல்கள்.

20.07.2026 14:22:29

ஈரானில் அதிகரித்து வரும் மோதல் மற்றும் பாதுகாப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு, அங்குள்ள இந்தியத் தூதரகம் இந்தியக் குடிமக்களுக்கு அவசர கால வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது

எந்தவொரு நோக்கத்திற்காகவும் ஈரானுக்குப் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ள இந்தியர்கள், அங்கு பாதுகாப்புச் சூழல் சீரடையும் வரை தங்களது பயணத்தைத் தற்காலிகமாக ஒத்திவைக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை, ஏற்கனவே ஈரானில் வசித்து வரும் இந்தியர்கள், தற்போது கிடைக்கக்கூடிய விமானச் சேவைகளைப் பயன்படுத்தி தற்காலிகமாக அங்கிருந்து வெளியேறுவது குறித்துப் பரிசீலிக்க வேண்டும்.

ஈரானில் தங்கியிருக்கும் இந்தியர்கள் நாட்டின் தெற்கு கடற்கரைப் பகுதிகள் போன்ற அதிக இராணுவ நடவடிக்கைகள் நடைபெறும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்து, மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை தூதரகத்தில் தங்களது விவரங்களைப் பதிவு செய்யாத இந்தியர்கள் உடனடியாகப் பதிவு செய்வதோடு, ஈரானில் உள்ள இந்தியர்கள் ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால், தூதரகத்தை பின்வரும் எண்களில் தொடர்புகொள்ள முடியுமெனக் கேட்டுக்கொண்டுள்ளது..

+989128109115 +989128109102 +98912810910 +989932179359