இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஜேஸன் ரோய், வெளியேறியுள்ளார்.

09.11.2021 12:28:45

 

ரி-20 உலகக்கிண்ண தொடரிலிருந்து இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஜேஸன் ரோய், வெளியேறியுள்ளார்.

சுப்பர்-12 சுற்றில் ஷார்ஜாவில் தென்னாபிரிக்கா அணிக்கெதிரான போட்டியில், களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த போது ஜேஸன் ரோய், உபாதைக்குள்ளானார்.

ஆனால், தொடர்ந்து துடுப்பெடுத்தாட களமிறங்கிய அவர், 20 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில் காயத்தின் வலிக் காரணமாக வெளியேறினார்.

தற்போது அவருக்கு காலின் பின் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதால், அவர் தொடர்ந்து ஓய்வில் இருக்க மருத்துவக் குழு அறிவுறுத்தியுள்ளது. இதனால் ரி-20 உலகக்கிண்ண தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து வெளியேறினார்.

இதற்கு பதிலாக 30 வயதான வலதுக் கை துடுப்பாட்ட வீரரான ஜேம்ஸ் வின்ஸ் அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார். இவர் பகுதிநேரமாக பந்து வீசக்கூடியவர்.

உலகக்கிண்ண தொடரின் ஐந்து போட்டிகளிலும் விளையாடிய 31 வயதான ரோய், மொத்தமாக 123 ஓட்டங்களை பெற்றார். இதில் பங்களாதேஷுக்கு எதிராக அதிகபட்சமாக 61 ஓட்டங்களை எடுத்தார்.