தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு.

16.07.2025 14:47:59

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை மாவட்டத்தில் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு விஜய் தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் வணக்கம்.

தமிழக அரசியல் களத்தின் முதன்மை சக்தியான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் திகதி (25.08.2025) திங்கட்கிழமை அன்று மதுரையில் நடைபெற உள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்கிறேன்.

வாகை சூடும் வரலாறு திரும்பட்டும். வெற்றி நிச்சயம். நன்றி"என்று கூறியுள்ளார். முன்னதாக, விக்கிரவாண்டியில் நடைபெற்ற மாநாட்டிற்கான பூமி பூஜையை தமிழக வெற்றி கழகத்தினர் பிரம்மாண்டமாக நடத்தி முடித்த நிலையில், மதுரை மாநாட்டிற்கான பூமி பூஜையை ஒரு சில மாவட்டச் செயலாளர்களுடன் எளிமையாக நடத்தி முடித்துள்ளனர்.