பராசக்தி படத்தில் இணைந்த அப்பாஸ்.

19.08.2025 07:03:00

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் இணைந்து நடித்து வரும் படம்தான்'பராசக்தி'. 

1965 காலகட்டத்தில் ஹிந்தி திணிப்பு போராட்டம் குறித்து இப்படம் உருவாகிறது. டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். 

ஏற்கனவே இந்த படத்தில் பல முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்க 2000 ஆரம்ப காலகட்டத்தில் பிரபல நடிகராக வலம் வந்த அப்பாஸ், முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. 

11 வருடங்களுக்கு பிறகு அப்பாஸ் மீண்டும் படங்களில் நடிப்பதை தொடங்கியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் படத்தை தொடர்ந்து தற்போது ‛பராசக்தி' படத்தில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.