கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் பலி
17.08.2021 06:07:55
குடும்பத்தகராறு காரணமாக நபர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
வல்வெட்டித்துறை வல்வெட்டியில் நள்ளிரவு 12.30 மணிக்கு இந்தச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த அவரை உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று அனுமதித்த போதும் அவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.