துணிச்சலான தலைமைத்துவமே நாட்டிற்குத் தேவை

30.08.2024 08:31:14

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போன்ற துணிச்சலான தலைமைத்துவமே நாட்டிற்குத் தேவை என  பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தொிவித்தாா்.

அம்பாந்தோட்டையில் நடைபெற்ற ‘இயலும் ஸ்ரீலங்கா’ வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அஜித் ராஜபக்ஷ இதனைக் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

அரகலய இருந்த காலத்தில் ஆளும் கட்சியினர் செத்துப் பிழைக்க வேண்டிய நிலைமை காணப்பட்டது. இன்று பங்களாதேஷில் காணும் காட்சிகளை அன்று இலங்கையில் பார்த்தோம்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீதியில் கொல்லப்பட்டனர். நாடாளுமன்றத்திற்கு தீ வைக்க முயற்சித்தனர்.

ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதற்கு இடமளிக்கவில்லை. அன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது துணிச்சலை காண்பித்தார்.

அப்போது சபாநாயகர் கட்சி தலைவர்களை அழைத்து பேசிய போது அதற்கு செல்லக்கூட எனது குடும்பத்தினர் அனுமதிக்கவில்லை.
எம்மீது தாக்குதல் நடத்தப்படும் என அஞ்சினர்.

ஆனால், ரணில் விக்ரமசிங்கவை எமது கட்சியின் ஆதரவுடன் ஜனாதிபதி பதவியில் அமர்த்த ஆதரவளித்தோம்.

அதனால் இரு வருடங்களுடன் அவருடைய பாதுகாப்பின் கீழ் மக்கள் சுமூகமாக வாழக்கூடிய நாட்டை கட்டியெழுப்பினோம்” என பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ மேலும் தொிவித்தாா்.