சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டமைக்கு பாக்கியம் செய்துள்ளேன்-கெஹலிய

17.08.2021 06:04:18

சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டமைக்கு பாக்கியம் செய்துள்ளேன். கொவிட் -19 வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள சவாலை வெற்றிகொள்ள நாட்டு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்  என சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் பவித்ரா  வன்னியராச்சி கொவிட் தொற்று பரவலை  கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயற்பட்டமைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அமைச்சரவை மாற்றத்தில் தான் சுகாதாரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டமை செய்த பாக்கியம் என்று கருத வேண்டும்.

கொவிட் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள சவாலை வெற்றிகொள்ள நாட்டு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

பிரதான அமைச்சு பதவிகள் நேற்றைய தினம் திடிரென மாற்றமடைந்தது. கடந்த காலங்களில் பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு பேசுபொருளாக அமைந்த அமைச்சு பதவிகளில் இவ்வாறு மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சுகாதாரத்துறை அமைச்சு குறித்து பல்வேறு தரப்பினர் குறிப்பாக பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைப்பதற்கு முன்னின்று செயற்பட்ட அபயராம விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் சுகாதாரத்துறை அமைச்சின் செயற்பாடுகளை கடுமையான முறையில் விமர்சித்து வந்தார். 

இவ்வாறன பின்னணியில்  ஊடகத்துறை அமைச்சராக பதவி வகித்த கெஹெலிய ரம்புக்வெல புதிய சுகாதார அமைச்சராகவும், சுகாதாரத்துறை அமைச்சராக  பதவி வகித்த பவித்ரா வன்னியராச்சி போக்குவரத்து துறை அமைச்சராகவும் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவினால் நேற்று நியமிக்கப்பட்டனர்.