காசாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27,000 ஐ கடந்தது!

02.02.2024 18:13:42

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படையினருக்கும் இடையே  இடம்பெற்று வரும் போர் காரணமாக  காஸாவில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27,019 ஆக உயர்வடைந்துள்ளது.


அத்துடன் காயமடைந்த பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கையும்   66,139 ஆக  உயர்வடைந்துள்ளது.

இந்நிலையில் இஸ்ரேலியப் படைகள், அம்புலன்ஸ்கள் மற்றும் தற்காப்புக் குழுவினரை தடுப்பதால், இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பவர்களை மீட்கமுடியாமல் திணறுவதாகவும், இதனால் ஆயிரக் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பாலஸ்தீன அமைச்சகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.