வடக்கு - கிழக்கு இணைந்த மாகாண சபையில் முதலமைச்சராக இருக்க விரும்புகின்றேன் - சாணக்கியன் அதிரடி

01.11.2021 11:00:00

வடக்கு - கிழக்கு இணைந்த மாகாண சபையில் முதலமைச்சராக இருக்க விரும்புகின்றேன் என்று நான் இதற்கு முன்னர் அறிவித்திருந்தேன். எனினும் அப்போது அதனை நான் விளையாட்டுக்குத்தான் கூறியிருந்தேன். ஆனால் இப்போது அதனை சிந்தித்துப் பார்த்தால் அது ஒரு நல்ல திட்டம். எனக்கு அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் நான் நிச்சயமாக அதனை விரும்புவேன்  என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன்(Shanakiyan Rajaputhiran Rasamanickam) தெரிவித்துள்ளார்.

வானொலி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

வடக்கும் கிழக்கும் இணைந்த மாகாணசபையின் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கும் எனது விருப்பத்தை நீங்கள் பார்க்கலாம். நான் இப்படி கூறியவுடன், சாணக்கியன் எவ்வாறு இப்படிக் கூற முடிவும் என்று என் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படலாம். இது என்னுடைய விருப்பம், எனது தனிப்பட்ட ஆசை.

கிழக்கில் எனது செயற்பாடுகளை பொறுத்தவரையில், நான் ஒருபோதும் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக பேசி என்னுடைய அரசியலை நான் செய்யவில்லை.