எதிர்வரும் தேர்தல்களில் நாம் வெற்றி பெறுவது நிச்சயம் : மஹிந்த !

16.03.2024 08:50:33

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் வேட்பாளர் ஒருவரை களமிறக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 

நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நிச்சயம் வெற்றிபெறும் எனவும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் இன்னும் பெயரிடப்படவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.