வடக்கு தமிழ்ப் பாடசாலைகளுக்கு 9ஆம் திகதி விடுமுறை.

07.11.2026 13:17:00

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு,  திங்கட்கிழமை (9) வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்துத் தமிழ்ப் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் அறிவித்துள்ளார்.

 

வடக்கு மாகாணத்தில் வழங்கப்படும் இந்த விசேட விடுமுறைக்கு ஈடுசெய்யும் வகையில், எதிர்வரும் 14ஆம் திகதி சனிக்கிழமை கல்வி செயற்பாடுகள்  முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, வடக்கு மாகாணத்திலுள்ள சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகள் எதிர்வரும் 9ஆம் திகதி வழமைபோல் இயங்கும் எனவும் ஆளுநர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, நாளை (8) கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய, ஊவா, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை (9) விசேட விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.