உள்ளுராட்சி மன்றங்கள் துப்பரவு பணிகளை மேற்கொண்டு பாடசாலை இயங்க வழிவகை செய்ய வேண்டும்
நாடளாவிய ரீதியில் 200 மாணவர்களுக்கு குறைவான மாணவர்கள் கல்வி பயில்கின்ற பாடசாலைகளை எதிர்வரும் 2021.10.21 ஆம் திகதி மாணவர்களின் பாடசாலை கல்வி மீள ஆரம்பிக்கப்பட இருக்கின்றது.
வவுனியாவில் மீள ஆரம்பிக்க இருக்கின்ற பாடசாலைகளை சிரமதானம் செய்வது சம்பந்தமாகவும், கொவிட் 19 காரணமாக மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது சம்பந்தமாகவும், பாடசாலைகள் நீண்ட நாட்கள் பராமரிப்பு இல்லாமல் இருந்ததனால் பாடசாலை வெளிகளில் புற்கள் , குப்பை கூழங்களும் இருக்கும் என்பதால் பாடசாலை வளாகத்தை உள்ளூராட்சி மன்றங்கள் துப்பரவு பணிகளை மேற்கொள்வதோடு பிரதேச அரசியல் வாதிகளும் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் பெற்றோர்கள் கூறியுள்ளனர்.
அத்துடன், 21 ஆம் திகதி 200 ற்கு குறைவான மாணவர்கள் கல்வி பயிலும் பாடசாலைகள் சுகாதார நடைமுறைகளுடன் ஆரம்பிக்க அதிபர், ஆசிரியர்களும் ஒத்துழைப்பும் வழங்க வேண்டும் எனவும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.