மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா. பானா காத்தாடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடக்க தொடங்கிய அதர்வா இதுவரை பல படங்களிலும் நடித்து விட்டார்.
இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவான பரதேசி படத்தில் அதர்வா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கைத்தட்டல்களை வாங்கினார்.
காதல் கலந்த ஆக்சன் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில்,
இயக்குனர் ஹரி இயக்கவுள்ள புதிய திரைப்படத்தில் நடிகர் அதர்வா நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கம் புதிய நெட்பிலிக்ஸ் வெப் தொடரில் நடித்து வரும் அதர்வா படப்பிடிப்பு முடிந்தவுடன் ஹரியுடன் இணைவார் என சொல்லப்படுகிறது. இப்படம் குடும்ப பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகவிருப்பதாக சொல்லப்படுகிறது..