இலங்கை அணிக்கு பேரிடி !
இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் காலே டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதி போட்டியில் வெளியேறினார்.
காலேவில் இலங்கை-அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் ஏஞ்சலோ மேத்யூஸ் 39 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இரண்டாம் நாள் ஆட்டநேர முடிந்த பின்னர், மேத்யூஸ் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அதனைத் தொடர்ந்து அவர் ஆண்டிஜன் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, போட்டியின் பாதியிலேயே வெளியேறினார்.
மேத்யூஸ் அணியின் மற்ற உறுப்பினர்களிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவருக்கு பதிலாக மூன்றாவது நாளில் ஒஷாடோ பெர்னாண்டோ களமிறங்கியுள்ளார்.
எனினும் அனுபவம் வாய்ந்த வீரரான ஏஞ்சலோ மேத்யூஸ் போட்டியின் முக்கிய கட்டத்தில் வெளியேறி இருப்பது இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவாகும். இரண்டாவது டெஸ்ட் போட்டி அடுத்த வெள்ளிக்கிழமை தொடங்க உள்ளதால், ஐந்து நாட்கள் மட்டுமே மேத்யூஸ் தனிமைப்படுத்துதலில் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.