சபாநாயகரின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள்.

02.02.2026 14:32:51

பணிநீக்கம் செய்யப்பட்ட நாடாளுமன்ற பிரதி செயலாளர் சமிந்த குலரத்ன, சபாநாயகருக்கு எதிராக முறைப்பாடொன்றை முன்வைப்பதற்காக இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார்.

இதன்போது சமிந்த குலரத்ன சார்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த சட்டத்தரணி மிதுன் டயஸ், இது அரசாங்கத்திற்கு எதிரான முறைப்பாடு அல்ல எனவும், தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள தனது கட்சிக்காரருடன் கொண்டுள்ள தனிப்பட்ட விரோதம் காரணமாகவே இம்முறைப்பாடு செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், சபாநாயகரின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்பிலான முறைப்பாட்டை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்ததாகவும் சட்டத்தரணி மேலும் தெரிவித்தார்.