
அட்லீ – அல்லு அர்ஜூன் படத்தில் 6 நடிகைகளா?
28.05.2025 07:10:00
அட்லீ தனது ஆறாவது திரைப்படத்தின் அறிவிப்பை கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தார்.
இந்த படத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம் பெரிய பொருட்செலவில் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.
அல்லு அர்ஜூன் 22வது படமாக உருவாகவுள்ள இப்படத்தின் அறிவிப்பு காணொளி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
அதில் ஹாலிவுட் திரரைப்படங்களில் பணிபுரிந்த VFX தொழில்நுட்ப நிபுணர்கள் இப்படத்தின் கதை குறித்தும் பெருமையாக பேசி, படத்தில் இணைந்து வேலை செய்வதற்கான ஆர்வத்தை வெளிப்படுத்தினர்.
மேலும் அந்த காணொளியில் ஏனைய நடிகர்கள் குறித்த எந்த வித தகவலும் குறிப்பிடாமல் இருந்தது.
இந்த நிலையில் படத்தில் நடிக்கவுள்ள நடிகைகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.