காஷ்மீரில் இரு தீவிரவாதிகள் கைது !

15.02.2021 10:34:50

காஷ்மீரில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட முயன்ற இரு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

புட்காம் மாவட்டத்தில் ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் மற்றும் இராணுவத்தினர் இணைந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போதே லஷ்கர் இ தொய்பா மற்றும் தெஹ்ரிக் உல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த இரு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவரும் புல்வாமா மற்றும் குல்காம் மாவட்டங்களில் கையெறி குண்டுகளை வீசியதாக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் என்பது தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.