SLFP இன் குழுக்கூட்டத்தில் நீதியமைச்சர்

01.04.2024 09:53:17

வார இறுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ கலந்துகொண்டமை பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணையவிருக்கிறாரா என வினவிய ஊடகவியலாளர்களுக்கு பதிலளித்த அமைச்சர், தான்  பின்னர் அரசியல் தீர்மானம் ஒன்றை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

“மறைந்த பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க கட்சியை வழிநடத்திய காலத்திலிருந்து நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராக இருந்தேன். எனவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் நான் கலந்துகொள்வது ஒன்றும் புதிதல்ல,” என்றார். 

அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்து முழுநேர ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைவீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், பின்னர் அரசியல் தீர்மானம் எடுப்பதாக தெரிவித்தார்.

தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து விரிவுரை ஆற்ற தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எனது விரிவுரையின் போது நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எவ்வாறு பங்கு வகிக்க முடியும் என்பதை நான் விளக்கினேன்,” என்று அவர் கூறினார்.