ஈரானிய கப்பலை திருகோணமலைக்கு அனுப்புவதில் சிக்கல்!
08.03.2026 13:17:06
|
இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பில் உள்ள ஈரானியப் போர்க்கப்பலான IRIS Bushehr, இயந்திரக் கோளாறு காரணமாகத் திருகோணமலை துறைமுகத்திற்குப் பயணிக்க முடியாமலுள்ளது. இதனையடுத்து, நேற்றும் கொழும்புத் துறைமுகத்தின் வெளி நங்கூரப் பகுதியிலேயே, நிறுத்தப்பட்டிருந்தது. |
|
முன்னதாக, ஈரானிய கப்பல் மற்றும் அதன் மாலுமிகளை இலங்கை அரசாங்கம் முறைப்படி தனது பொறுப்பில் ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க கடந்த வியாழக்கிழமை அறிவித்திருந்தார். இதன்படி21 மாலுமிகள் உட்பட்ட 208 பேர் கரைக்கு அழைத்து வரப்பட்டு, தற்போது வெலிசறை கடற்படை முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தற்போது கப்பலில் சுமார் 12 முதல் 14 மாலுமிகள் மட்டுமே பாதுகாப்புப் பணிகளுக்காக தங்கியுள்ளனர். |