முன்னாள் ஜனாதிபதி ரணிலின் வழக்கு ஒத்திவைப்பு!
11.11.2026 08:53:31
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணைக்காக, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (11) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்தார்.
இதன்போது, அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை டிசம்பர் 9ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.