கெய்ர்ன்ஸ் கால்கள் செயலிழப்பு

28.08.2021 11:18:18

நியூசிலாந்தின் கிறிஸ் கெய்ர்ன்ஸ் கால்கள் செயலிழந்தன.

நியூசிலாந்து அணி முன்னாள் வேகப்பந்துவீச்சு ‘ஆல் ரவுண்டர்’  கிறிஸ் கெய்ர்ன்ஸ் 51. 62 டெஸ்ட், 215 ஒருநாள், 2 ‘டுவென்டி–20’ போட்டிகளில் பங்கேற்றார். இந்தியாவில் நடந்த ஐ.சி.எல்., ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்ற போது இவர் மீது சூதாட்ட புகார் எழுந்தது. 2012ல் இதிலிருந்து மீண்டார்.

ஆஸ்திரேலியாவின் கான்பெராவில் இருந்த இவர், திடீரென மயங்கிச் சரிந்தார். கிறிஸ் கெய்ர்ன்சின் இதயத்தில் இருந்து வயிற்றுப் பகுதிக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் பெருந்தமனி  குழாயின் உட்பகுதியில் கிழிவுகள் ஏற்பட்டது தெரியவந்தது. சிட்னி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இவரது உயிரை காப்பாற்றும் வகையில் அவசர இருதய ஆப்பரேஷன் செய்யப்பட்டது. அப்போது முதுகுத்தண்டில் பக்கவாதம் ஏற்பட்டு, கெய்ர்ன்சின் இரு கால்களும் செயலிழந்தன.

இதிலிருந்து மீண்டுவர, முதுகுத்தண்டு ‘ஸ்பெஷாலிட்டி’ மருத்துவமனையில் கெய்ர்ன்ஸ் அனுமதிக்கப்பட உள்ளார்.