சென்னை விமான நிலையத்தின் தற்போதைய நிலை !

05.12.2023 08:48:16

சீரற்ற காலநிலை காரணமாக ஸ்தம்பித்து போயிருந்த சென்னை விமான நிலையத்தின் செயற்பாடுகள்  மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

இதன்படி, சென்னை விமான நிலையத்தில் காலை 9 மணி முதல் மீண்டும் விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளனன.

 

எனினும் வழக்கம் போல விமான சேவைகள் இயக்கப்படாது எனவும், மிகவும் குறைவான அளவிலான விமானங்கள் இயக்கப்படும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சென்னைக்கு வர வேண்டிய 88 விமானங்களும் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 89 விமானங்களுமாக மொத்தம் 177 விமான சேவைகள் இன்று இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை மறு அறிவித்தல் வரை கட்டுநாயக்க - சென்னை மற்றும்  யாழ்ப்பாணம் - சென்னை  இடையிலான விமான சேவைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.