இந்திய விமானப்படையின் மாபெரும் திட்டம்!

17.09.2025 08:02:45

இந்திய விமானப்படை எதிர்கால போர் உத்திகளில் முன்னிலை பெறும் வகையில், 20240-ஆம் ஆண்டுக்குள் 20 ஸ்குவாட்ரன்கள் ஆளில்லாத ரகசிய போர் விமானங்களை (UAVs) உருவாக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்குப் பிறகு, இந்தத் திட்டம் இந்திய விமானப்படையின் 42 ஸ்குவாட்ரன்கள் (manned) போர் விமான திட்டத்திலிருந்து தனியாக செயல்படவுள்ளது. இந்த புதிய விமானங்கள் 1 டன் முதல் 13 டன் வரை எடையுள்ள மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன.

1- Collaborative Combat Aircraft (CCA)

இவை சிறிய அளவிலான விமானங்கள். Su-30MKI, Rafale, Tejas Mk2 மற்றும் AMCA போன்ற மனித விமானங்களுடன் இணைந்து பறக்க வடிவமைக்கப்பட்டுள்ளன.

எதிரியின் பாதுகாப்பு அமைப்புகளை அழிக்க, உளவு சேகரிக்க மற்றும் இலக்குகளை தாக்கும் பணியில் ஈடுபடுகின்றன. இதில் 10 முதல் 12 ஸ்குவாட்ரன்களை உருவாக்க இந்திய விமானப்படை திட்டமிட்டுள்ளது.

2- Tactical Stealth Fighter-Bombers

இவை 5 முதல் 10 டன் எடையுள்ள விமானங்கள். Rudram missile மற்றும் BrahMos-II போன்ற ஆயுதங்களை ஏந்தி, எதிரி நிலப்பகுதியில் துல்லியமான தாக்குதல்களை மேற்கொள்ளும் திறன் கொண்டவை. வடிவமைப்பில் அமெரிக்காவின் XQ-58 Valkyrie-வை போன்று இருக்கும்.

3- Unmanned Stealth Fighters

இவை 10 முதல் 13 டன் எடையுள்ள மிகப்பாரிய விமானங்கள். DRDO-வின் Ghatak UCAV இதற்கான உதாரணம்.

4 டன் payload, supercruise திறன் மற்றும் AI மூலம் தானாகவே இயக்கப்படும். மற்ற விமானங்களை வழிநடத்தும் திறனும் கொண்டவை.