13 தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள்!

14.07.2024 09:30:33

13 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், இண்டியா கூட்டணி கட்சிகள் சில மாநில இடைத்தேர்தலில் வென்று கூடுதல் இடங்களைப் பெற்றுள்ளதாகக் கருத்துகள் முன்வைக்கப்படுகிறது.

தமிழகம், மேற்கு வங்கம், உத்தராகண்ட், மத்தியப் பிரதேசம் , இமாச்சல் பிரதேசம், பஞ்சாப், பிஹார் ஆகிய மாநிலங்களில் உள்ள 13 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிந்து அதன் முடிவுகள் வெளியாகியுள்ளன.

மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் நடந்த முதல் இடைத்தேர்தல் இதுவாகும். இந்நிலையில், ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணமூல் காங்கிரஸ், திமுக மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் அடங்கிய இண்டியா கூட்டணிகள் இடையே கடும் போட்டி நிலவியது.

 

அதன்படி, 13 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 2 இடங்களில் பாஜகவும், 4 இடங்களில் திரிணமூல் காங்கிரஸும் பெற்றிருந்தது.

மேலும், காங்கிரஸு 4 இடங்களிலும், திமுக 1 இடத்திலும், ஆம் ஆத்மி 1 இடத்திலும் , சுயேச்சை வேட்பாளர் ஓர் இடத்திலும் வென்றி பெற்றுள்ளனர்.

கிட்டத்தட்ட இண்டியா கூட்டணியிலுள்ள கட்சிகள் 10 இடங்களில் வென்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.