இராணுவ வீரர் இருவர் உடனடி இடமாற்றம் - பொதுமக்களை முழந்தாளிட வைத்த சம்பவம்

20.06.2021 11:23:43

 

மட்டக்களப்பு- ஏறாவூர், மிச் நகர் பகுதியில் பொதுமக்கள் சிலரை, இராணுவத்தினர் முழந்தாளிட வைத்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி தெரிவித்தார்

மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ வீரர்கள் இருவரையும் உடனடி இடமாற்றம் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏறாவூர் மிச் நகர் பிரதேசத்தில் பயணக் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்ட சிலரை, இராணுவத்தினர் பிடித்து, வலுக்கட்டாயமாக முழந்தாளிட வைத்து, கைகளை உயர்த்துமாறு பணித்துள்ளனர்.

இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, தற்போது பேசுப் பொருளாக மாறியுள்ளது.

இந்நிலையிலேயே சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவத்தினர் இருவரை உடனடி இடமாற்றம் செய்துள்ளதாகவும்  அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.