பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஜம்மு - காஷ்மீரில் ஒருவர் உயிரிழப்பு - ஒருவர் படுகாயம்
30.05.2021 11:11:42
ஜம்மு- காஷ்மீர், அனந்த்நாக் மாவட்டத்திலுள்ள பீஜ்பெஹேரா என்ற பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த ஒருவர், வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
மேலும் குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த மற்றையவர், ஷாநவாசை ஸ்ரீநகரிலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் காஷ்மீர் பொலிஸார், குறித்த பகுதியில் முகாமிட்டு, தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருவதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.