சவுதி அரேபியாவில் மது தடை நீக்கப்பட்டதா?

27.05.2025 07:51:07

சவுதி அரேபியா, 73 ஆண்டுகால மது தடையை நீக்கும் என்று ஊடகங்களில் வெளியான செய்திகளை திங்களன்று (26) அந் நாட்டு ஒருவர் மறுத்தார்.

இது முஸ்லிம்களுக்கு தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் அவர் விவரித்தார்.

2034 கால்பந்து உலகக் கோப்பையை நடத்த நாடு தயாராகி வருவதால், சுற்றுலா அமைப்புகளில் மதுபான விற்பனையை அனுமதிக்க சவுதி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கடந்த வாரம் செய்திகள் வெளியாகின.

 

இந்தத் தகவலுக்கான நம்பகத் தகுந்த ஆதாரம் சுட்டிக்காட்டப்படவில்லை.

ஒரு காலத்தில் தீவிர பழமைவாத நாடாக இருந்த இந்த இராச்சியம், தனது பொருளாதாரத்தை பன்முகப்படுத்தவும், எண்ணெயைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் ஒரு இலட்சியத் திட்டத்தின் ஒரு பகுதியாக, சுற்றுலாப் பயணிகளையும் சர்வதேச வணிகங்களையும் ஈர்க்க சில கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளது.

சவுதி அரேபியாவின் நடைமுறைத் தலைவரான, பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், 2017 ஆம் ஆண்டில் பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதிப்பதற்கான தடையை முடிவுக்குக் கொண்டுவந்தது, பொது இடங்களில் பாலினப் பிரிவினை குறித்த சில விதிகளைத் தளர்த்தியது மற்றும் மதக் காவல்துறையின் அதிகாரத்தைக் குறைத்தது உள்ளிட்ட பல சீர்திருத்தங்களை முன்னெடுத்துள்ளார்.

 

இந்த நிலையில் வெளியான மதுபான விதிகள் பற்றிய அறிக்கை இராஜ்ஜியத்தில் ஒரு தீவிரமான விவாதத்தைத் தூண்டியது.

சவுதி அரேபியா மற்றும் குவைத் மட்டுமே மது விற்பனையைத் தடை செய்யும் வளைகுடா நாடுகள்.

சவுதி அரேபியாவில் மதுபானங்களை உட்கொள்ள அனுமதிக்கும் ஒரு சிறிய நடவடிக்கை, கடந்த ஆண்டு தலைநகர் ரியாத்தில் முஸ்லிம் அல்லாத தூதர்களுக்கு மட்டுமே சேவை செய்யும் முதல் மதுபானக் கடை திறக்கப்பட்டது.

அதற்கு முன்பு, இராஜதந்திர அஞ்சல் மூலமாகவோ அல்லது கறுப்புச் சந்தையில் மட்டுமே மதுபானம் கிடைத்தமையும் குறிப்பிடத்தக்கது.