இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் !
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து பல்வேறு சந்திப்புக்களையும் மேற் கொண்டார்.
வரலாற்று பிரசித்திபெற்ற நல்லூர் கந்த சுவாமி ஆலயத்திற்குச் சென்று விசேட பூஜை வழிபாடுகளில் கோபால் பாக்லே ஈடுபட்டார்.
அதன் பின்னர் நல்லை ஆதீனத்திற்குச் சென்று ஆதீன குருமுதல்வரைச் சந்தித்து, இந்திய உயர்ஸ்தானிகர் கலந்துரையாடியதாகத் தெரிய வந்துள்ளது.
இதேநேரம், இந்திய உதவியில் அமைக்கப்படும் யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்திற்கும் சென்று புனரமைப்பு பணிகளை அவர் பார்வை யிட்டார்.
அதனைத் தொடர்ந்து, யாழ்ப்பாண பொது நூலகத்திற்குச் சென்று நூல கத்தை பார்வையிட்டதுடன், மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணி வண்ணனைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இதேவேளை, யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய உயர்ஸ்தானிகர், நீதி கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபடும் தங்களைச் சந்திக்காமல் சென்றமை குறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.