இலங்கை தொடர்பில் - புதிய குற்றச்சாட்டு!

08.09.2022 00:05:00

இலங்கையின் பொருளாதார நெருக்கடி

இலங்கையை தற்போதைய நெருக்கடியான நிலைக்கு கொண்டு வந்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்ட அறிக்கையில் இந்த விபரம் உள்ளடக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் பேரவையின்  கூட்டத்தொடர்

மனித உரிமைகள் பேரவையின் 52ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டெம்பர் 12ஆம் திகதி முதல் ஒக்டோபர் 7ஆம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் ஏற்கனவே ஜெனிவா சென்றுள்ளனர்.

நாகரிக உலகம் ஏற்றுக்கொள்ளாத கடுமையான சட்டங்களைப் பயன்படுத்துவதையும், அமைதியான போராட்டங்களை ஒடுக்குவதையும் நிறுத்துமாறு மனித உரிமைகள் ஆணையம் இலங்கை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

நம்பகமான உண்மையைக் கண்டறியும் பொறிமுறை

அத்துடன், நம்பகமான உண்மையைக் கண்டறியும் பொறிமுறையொன்றை உருவாக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் மனித உரிமைகள் ஆணைக்குழு, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் முன்னேற்றமடையாமல் இழுத்தடித்து வருவது குறித்தும் கவலை வெளியிட்டுள்ளது.