ஜெயிலர் 2 இசை வெளியீட்டு விழா எப்போது?!

28.09.2026 08:43:38

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் திரைப்படம் ஜெயிலர் 2.  ஜெயிலர் முதல் பாகம் சூப்பர் ஹிட் அடித்த நிலையில் தற்போது இரண்டாம் பாகம் உருவாகியிருக்கிறது. முதல் பாகத்தை போலவே இந்த படத்திலும் மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோர் கேமியோ வேடத்தில் நடித்திருக்கிறார்கள். அதோடு விஜய் சேதுபதி, பாலிவுட் நடிகை ரித்திக் ரோஷன் ஆகியோர் சிறப்பு கேமியோ வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். ஏற்கனவே பாடல்கள் வெளியாகி ஹிட் அடித்துள்ளது.
 

ஜெயிலர் 2 திரைப்படம் வருகிற அக்டோபர் 15ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில்தான் ஜெயிலர் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது நடக்கும் என ரஜினி ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி என்ன பேசப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு அவர்களிடம் ஏற்பட்டிருக்கிறது..

அனேகமாக ஜெயிலர் 2 இசை வெளியீட்டு விழா வருகிற அக்டோபர் முதல் வாரத்தில் சென்னையில் நடைபெறும் என சொல்லப்படுகிறது. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.