77 ஆண்டுகளாக மக்கள் எவரும் குடியேற தடை விதிக்கப்பட்ட தீவு நாடு

03.07.2022 10:50:10

பசிபிக் பெருங்கடலின் நடுவில், உலகின் மிகவும் அணுசக்தி மாசுபட்ட தீவு நாடாக Bikini Atoll அமைந்துள்ளது. இந்த தீவு நாட்டிலேயே கடந்த 77 ஆண்டுகளாக மக்கள் குடியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

1945ம் ஆண்டு முதல் ஜப்பானில் அணுகுண்டுகள் வீசப்பட்டதில் இருந்து Bikini Atoll தீவில் மக்கள் வசிக்கவில்லை. மட்டுமின்றி அமெரிக்கா அணு ஆயுத சோதனைகளுக்கு என Bikini Atoll தீவை பயன்படுத்தத் தொடங்கியது.

அதுவரை இங்கு குடியிருந்த 167 பேர்களை வேறு தீவுகளுக்கு குடியேற இராணுவம் கட்டாயப்படுத்தியதுடன், முன்னெடுக்கப்படும் அணு ஆயுத சோதனைகள் என்பது எதிர்காலத்தில் மிகப்பெரிய போர்களை தடுக்கும் நோக்கிலானது எனவும் அங்குள்ள அப்பாவி மக்களை நம்ப வைத்தனர்.

அதன் பின்னர் Bikini Atoll தீவில் மக்கள் குடியேற முயற்சிக்கவில்லை என்றே கூறப்படுகிறது. தற்போது குறித்த தீவானது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளது. மட்டுமின்றி, கடற்படையின் கப்பல்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

Bikini Atoll தீவில் இருந்து வெளியேறிய மக்கள், கண்டிப்பாக ஒருநாளில் திரும்ப தங்கள் குடியிருப்புகளுக்கு திரும்புவோம் என கூறியிருந்தனர். 1946 முதல் 1958 வரையில் 20 ஹைட்ரஜன் வெடிகுண்டுகள் உட்பட 23 அணு ஆயுத சோதனைகளை அமெரிக்கா முன்னெடுத்துள்ளது.

இருப்பினும் 1960களுக்கு பின்னர் மக்கள் குடியேற அனுமதிக்கப்பட்டாலும், கதிர்வீச்சு அபாயம் காரணமாக உடனடியாக தடை விதிக்கப்பட்டது. மேலும், அந்த மக்களை 450 மைல்களுக்கு வெளியே குடியேற வைத்தனர். தற்போது 2010கு பின்னர் Bikini Atoll தீவானது யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது.