பிற்பகல் நேரத்தில் மேலும் சில பகுதிகள் முடக்கப்படலாம்

29.04.2021 11:13:43

 

நாட்டில் மேலும் சில பிரதேசங்களை தனிமைப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இன்றைய தினம் (வியாழக்கிழமை) கிடைக்கும் தரவுகளுக்கு அமைவாக, தேவைப்பட்டால் மாத்திரம் பிற்பகல் நேரத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்படும் இடங்களைக் கருத்திற்கொண்டு, எதிர்காலத்தில் பெரும்பாலும் சில பிரதேசங்களை தனிமைப்படுத்த நேரிடும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.