தவெக வேட்பாளர்களை தலைவர் விஜயே அறிவிப்பார்!
14.12.2025 15:23:01
|
தவெக வேட்பாளர்களை தலைவர் விஜயே அறிவிப்பார் என தவெக ஐ.டி. விங் அறிக்கை வெளியிட்டுள்ளது. வெற்றிவாகை சூடப்போகும் நமது வேட்பாளர்களை, வெற்றித் தலைவர் மட்டுமே அறிவிப்பார். தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் அறிவிப்பு குறித்துப் பரவி வரும் தகவல் உண்மையில்லை. |
|
தற்போது நடைபெற்று வருவது தொகுதிவாரியான மற்றும் பூத் வாரியான பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டங்கள் மட்டுமே. வேட்பாளர் அறிமுகம் குறித்த தகவல், முறைப்படி தலைவர் அவர்களால் நேர்காணல் மேற்கொள்ளப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும். சரியான நேரத்தில் சரியான வேட்பாளர்களைக் களமிறக்குவார் தலைவர். அதுவரை களத்தைத் தயார்படுத்துவோம். மக்கள் பணியில் கவனம் செலுத்துவோம் என்று வெளியிடப்பட்டுள்ளது. |