புதிய லுக்கில் சத்யராஜ்;
நடிகர் சத்யராஜ், ரஜினிகாந்த் உடன் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இருவரும் மிஸ்டர் பாரத் என்ற படத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படத்தில் சத்யராஜ் நெகடிவ் வேடம் ஏற்றிருந்தார்.
இந்நிலையில், சத்யராஜ், ரஜினிகாந்த் இணையும் புதிய படத்துக்கு கூலி எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். படத்தில் ரஜினிகாந்த் நண்பராக சத்யராஜ் வருவார் என்று முதலில் கூறப்பட்டது.
எனினும் இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வரவில்லை.
எனினும் ரஜினிகாந்தின் புதிய படமான கூலி கேங்ஸ்டர் படம் என்று கூறப்படுகிறது. இதை மெய்ப்பிக்கும் விதமாக சத்யராஜின் புதிய கெட்அப் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
அதில் சத்யராஜ் தலைமுடிக்கு கலரிங் செய்துக்கொண்டு “ரக்டு“ கெட்அப்பில் காட்சியளிக்கிறார். கண்ணுக்கு கிளாஸ்ம் அணிந்துள்ளார். இந்தப் படத்தை ரசிகர்கள் டிரெண்ட் ஆக்கிவருகின்றனர்.
நடிகர் சத்யராஜ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் கடந்த 40 ஆண்டுகளாக இணைந்து நடிக்கவில்லை. இதற்குப் பின்னால் பகை உணர்வு இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் கதைகள் உலா வரும். இந்த நிலையில் ரஜினிகாந்த் உடன் சத்யராஜ் இணைந்து நடிப்பது பலதரப்பட்ட ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.