யாழ் மருத்துவமனைப் படுகொலை; 34 ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு

21.10.2021 07:10:42

இந்திய இராணுவத்தினரால் யாழ் போதனா வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்டோரின் 34 வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது

 
இந்திய இராணுவத்தினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டோரின் நினைவாக உயிரிழந்தோரின் உறவுகளால் பொது சுடர் ஏற்றப்பட்டு படுகொலை செய்யப்பட்டோரின் திருவுருவப் படங்களுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

 
சுகாதார நடைமுறைகளை பேணி மட்டுப்படுத்தப்பட்ட இடம்பெற்ற குறித்த நிகழ்வில் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ,பிரதிப் பணிப்பாளர், வைத்தியசாலை ஊழியர்கள் கலந்து கொண்டனர்