லண்டன் புறப்பட்டார் ஹரிணி.
18.05.2026 15:35:15
இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெறவுள்ள அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய திங்கட்கிழமை (18) பிற்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.
பிரதமருடன் மேலும் இருவர் உத்தியோகபூர்வ குழுவினராக (Delegation) இப்பயணத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.
இவர்கள் இன்று பிற்பகல் 1:20 மணியளவில், கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் யு.எல்.- 403 (UL-403) என்ற விமானம் மூலம் இங்கிலாந்தின் இலண்டன் நகர் நோக்கிப் புறப்பட்டனர்.
பிரதமர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் தமது உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து கொண்டு, எதிர்வரும் 23ஆம் திகதி மீண்டும் நாட்டை வந்தடையவுள்ளனர்.