விளக்கமறியலில் வைக்கப்பட்டார் மொரட்டுவ நகரசபை மேயர்
28.05.2021 11:22:21
கைது செய்யப்பட்டிருந்த மொரட்டுவ நகரசபை மேயர் சமன் லால் பெர்னாண்டோ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையிலேயே ஜுன் மாதம் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மொரட்டுவையில் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையின் போது, வைத்தியர் ஒருவருக்கு கடமையை செய்யவிடாது இடையூறு விளைவித்ததாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
இந்தநிலையில் மொரட்டுவ நகரசபை மேயர் சமன் லால் பெர்னாண்டோ கல்கிஸை பொலிஸ் நிலையத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) சரணடைந்தார்.
இதனையடுத்தே அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.